பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014


பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ உத்தரவு
பெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொரளை,  பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் பாதை திருத்த வேலைகள் தொடர்பிலான பெயர்ப் பலகைகள் ஆங்கிலம், சிங்கள மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறான பெயர்ப் பலகைகளில் மூன்று மொழிகளிலும் விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீதிகள், பாலங்கள் திருத்தப்படும் போது அது குறித்து அறிவிக்கப்பட வேண்டியது அவசியமானது.
எனினும், இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யக் கூடியவகையில் அமைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு அமைச்சர் நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.