பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014

மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். விதித்த திடீர் நிபந்தனை
பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 
நரேந்திரமோடி பிரதமராவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமர்கோவில் கட்டப்படும் என நரேந்திரமோடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். திடீர் நிபந்தனை விதித்துள்ளது.  
370 வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்தும் அறிவிக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளது.