பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014


இனி நான் முன்னாள் முதல்வர்; எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை: மோடி

குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்த நரேந்திர மோடி எந்த ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.



"முதல்வர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன், இனி நான் முன்னாள் முதல்வர்தான், இருப்பினும் ஒரு கோப்பைக் கூட நான் நிலுவையில் வைக்கவில்லை, தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபட்டிருந்தபோதும் இரவு வேளைகளில் நான் அதிகாரிகளை அழைத்து எனது வேலையை முடித்தேன்" என்று ஆனந்திபென் படேலை முதல்வராகத் தேர்ந்தெடுத்த பிறகு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பொது வாழ்க்கையில் குறுக்கு வழி என்ற பேச்சுக்கே இடமில்லை, என்னைப்போலவே கட்சியின் தொண்டர் ஒருவர் கடினமாக உழைத்தால் ஒருநாள் அவரும் அதற்கான பலனை அனுபவிப்பார்.
இப்போது அமித் ஷாவின் புகைப்படத்தைப் பார்த்தாலே எதிர்கட்சியினர் அஞ்சுவார்கள். தேசத்திற்கு உழைக்க ஒருவர் முடிவெடுத்தால் ஒருவர் என்னவெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம். இப்போது ஒவ்வொரு மட்டத்திலும் திறமையான தலைவர்களை நான் பார்க்கிறேன். இது எனது சாதனையல்ல அவரவர் கடினமாக உழைத்ததன் விளைவு.
எனது காங்கிரஸ் நண்பர்கள் இங்கு மத்தியப் புலனாய்வுத் துறையினரை அனுப்பி தேநீர் விற்பவர்களை அவமரியாதை செய்தனர், அது தேநீர்-புரட்சியாக மாறியது. அவர்கள் அனைவரும் காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பினர். இதுதான் சுயமரியாதையின் சக்தி" இவ்வாறு கூறினார் மோடி.