பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014

மன்மோகன் சிங்கை முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த பிரணாப் முகர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15வது மக்களவையைக் கலைக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டது. 

அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங் தனது வீட்டில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார். பிரதமரை மலர்ச்செண்டு கொடுத்து பிரணாப் முகர்ஜி வரவேற்றார். அமைச்சரவையின் தீர்மானத்தையும், தனது ராஜினாமா கடிதத்தையும் ஒப்படைத்தார் மன்மோகன் சிங்.
இருவரும் ஒரே அமைச்சரவையில் இருந்தவர்கள் என்பதால் நீண்ட நேரம் கைகுலுக்கி பேசிக்கொண்டனர். மன்மோகனுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். ராஷ்டிரபதி பவன் மாளிகை ஊழியர்களிடமும் மன்மோகன் சிங் விடைபெற்றார். அவரை பிரணாப் முகர்ஜி முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்குக்கு ராஷ்டிரபதி பவனில் சனிக்கிழமை விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில், பதவிகாலம் முடியும் மத்திய மந்திரிகள், 15-வது பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அளித்த இந்த விருந்தின்போது விடைபெறும் தலைவர்களுக்கு விசேஷ சைவ மற்றும் அசைவ உணவு வகைகளும், பெங்காலி வகை உணவுகளும் பரிமாறப்பட்டன.