பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2014

புலிகளின் நெடியவன் பிரிவில் குழப்பம் -பாதுகாப்பு அமைச்சு
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர் அமைப்புக்களை தடை செய்தமை காரணமாக, அந்த அமைப்புக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது
இந்திய செய்திசேவை ஒன்றுக்கு இந்த தகவலை இலங்கை பாதுகாப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியுள்ள இந்த செய்தியின் காரணமாக சாத்தியமான பல செயல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த தடையின் மூலம் குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் தடுக்கக்கூடியதாக உள்ளது என்று இலங்கையின் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்ததடையின் காரணமாகவே நோர்வேயின் உள்ள நெடியவனின் குழுவில் முறுகல் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.