பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2014


மோடிக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.
உங்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம்.
பலம் பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப் போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆரோக்கியமான கொள்கை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.
இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.