பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014

நாமலுக்கு “twitter” இல் அவமானம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப செயலாளர் பதவிக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமை சம்பந்தமாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தமது twitter பக்கத்தில் தெரிவித்து
இருந்த கருத்து தவறாது என உலக சுகாதார ஸ்தாபனம் அப்பக்கதிலேயே மறுப்புத் தெரிவித்துள்ளது
67 வது உலக சுகாதார ஸ்தாபன அமர்வுகளில் உப செயலாளர்கள் 5 பேரில் ஒருவராக மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதாகவும் அது உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயலாளர் பதவி அல்ல எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் twitter பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறெனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பதிலின் பின்னர் நாமல் ராஜபக்ஷ தமது twitter பதிவை நீக்கிகொண்டுள்ளார்