பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொல்துறை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். முனிநாதன்
கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

[சீதாராமன் மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மோகன் பியாரே வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலையரசி நில சீர்திருத்த இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். லல்லி வருவாய் துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீன்வளத்துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடைத்துறை இயக்குநராக டி.ஆப்ரஹாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை ஆணையராக சத்யப்ராவை தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் சுரேஷ் குமார் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.