பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014


கைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடுகிறார் வைகோ! 
பாளை பெருமாள்புரம் தென்றல் நகரில் 'வையாபுரியார் கைப்பந்தாட்ட கழகம் சார்பில்' மின்னொளி கைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை வையாபுரியார் கைப்பந்தாட்ட கழக தலைவரும் ம.தி.மு.க.
பொதுச்செயலாளருமான வைகோ தொடங்கி வைத்து பேசினார்.

இந்த கைப்பந்து போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. நாளை இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு 'டாக்டர் சிவந்தி ஆதித்தனார்' பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. நேற்று நடந்த போட்டிகளில் சாயர்புரம் வெல்டன் கிளப் அணியும், சாத்தான்குளம் அணி, தருவைகுளம் அணி, பாளை சேவியர் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
இன்று நெல்லை சாரா அணி, பாளை பெல் மார்க் கெட்டிங் அணி, தூத்துக்குடி அணி, கலிங்கப்பட்டி ஏ மற்றும் பி அணிகள், சங்கனா புரம் அணி மற்றும் நேற்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மோதுகின்றன.
இன்று மாலை நடைபெறும் போட்டியில் கலிங்கப்பட்டி ‘ஏ’ அணியில் வைகோவும் ஒரு கைப்பந்து வீரராக களம் இறங்கி விளையாடுகிறார்.
நேற்று நடந்த தொடக்க விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட கழக செயலாளர் ப.ஆ.சரவணன், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளரும், பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஜோயல், ம.தி.மு.க. இணைய தள தொடர்பாளர் மின்னல் முகமது அலி, சேவியர் கல்லூரி முன்னாள் உடற்கல்வி இயக்குனர் பெனடிக்ட், வைகோ மனைவி ரேணுகாதேவி, தம்பி ரவிச்சந்திரன், போட்டி களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் ராதாசங்கர், செந்தூர்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.