பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2014


மலேசியாவில் மூன்று புலிச் சந்தேக நபர்கள் கைது
மலேசியாவில் மூன்று விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொண்ட விசேட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மலேசிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இன்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் சர்வதேச ரீதியில் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்து வந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இவர்கள், விடுதலைப் புலிகளின் பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ளதுடன் நிதி சேகரிக்கவும் மலேசியாவை பயன்படுத்தி வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 2004 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.