பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014



சென்னை மெரீனா கடலில் தத்தளிப்பவர்களை மீட்க குழு
சென்னை மெரீனா கடலில் அலைகளில் சிக்கிக் கொள்பவர்களை உடனே மீட்க செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் என்ற அமைப்பு (இன்டியா) மருத்துவர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள்
அடங்கிய குழுவை மெரீனா கடலில் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்த குழுவினர் மாலையில் இருந்து இரவு வரை கடலில் சிக்கி தத்தளிப் பவர்களை மீட்டு உரிய சிகிச்சைகள் அளிப்பார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குழுவினர் பணியில் ஈடுபடுவார்கள்.
கடலில் சிக்கி தத்தளிப்பவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வேன் ஒன்றும் மெரீனா கடற்கரையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும். தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த சேவை (பீச் 2014) தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா சனிக்கிழமை கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் ரோசய்யா விழாவில் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் இந்த சேவை தொடர்பான சி.டி., புத்தகம் மற்றும் வீடியோ தொகுப்பை கவர்னர் வெளியிட்டார்.