பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014

உலக இளைஞர் மாநாட்டில் இன்று ஆர்ப்பாட்டம் 
news
உலக இளைஞர் மாநாடு நடைபெறும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஊடகவியலாள​ர் மண்டபத்துக்கு முன்பாக மாநாட்டில் பங்கேற்க வருகைதந்துள்ள பிரதிநிதிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
 
நைஜிரியாவில் கடத்தப்பட்டுள்ள சுமார் 300 இளம் பெண் பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
 
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கடத்தல் சம்பவம் குறித்து சர்வதேச கவனத்தை அதிகரிக்கும் வகையில் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.