பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014

யார் எதிர்த்தாலும் பதவியேற்பில் கலந்து கொள்வேன் : அடம்பிடிக்கிறார் மஹிந்த 
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாகவும்  இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய
அரசாங்கம் விடுத்த அழைப்பை மஹிந்த ஏற்றுக்கொண்டார் என  ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவிற்கு பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல்கட்சிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
 
தமிழக முதல்வர் ஜெயலிதா நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும், புதிதாக பொறுப்பேற்கும் அரசின் இந்த நடவடிக்கை வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என அறிவித்துள்ளார். 
 
இதேவேளை வைகோ உள்ளிட்ட ஏனைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மஹிந்தவிற்கு அழைப்பு விடுத்தமையை எதிர்த்துள்ளனர்.