பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2014


யாழ். தாவடியில் வெற்றுக் காணியொன்றில் ஆயுதங்கள் மீட்பு
யாழ்.தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பலாலி இராணுவத் தலைமையகம் இன்று செவ்வாய்க்கிழமை  உறுதிப்படுத்தியுள்ளது.
ஜே - 192  கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள இந்தப் பிரதேசத்திலிருந்து யூரியா பையினுள் கட்டப்பட்டிருந்த 5 ஆயிரம் ரி.56 துப்பாக்கி ரவைகள், இதர தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
குறித்த காணியினை காணி உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோது, ஆயுதங்கள் இருப்பதைக் கண்ணுற்று 511 வது படைப்பிரிவு இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினர்  குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.