பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014


ஊடகவியலாளர்களுக்கு கதவடைத்தார் முதலமைச்சர் விக்கி
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்தில் அல்லது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் சந்திப்புக்கள், கூட்டங்கள் மற்றும் இராஜீய நடவடிக்கைகள் குறித்து செய்திசேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் இனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இந்த ஊடகக் கதவடைப்பிற்குப் போதிய இடவசதி இல்லாமையே காரணம் என்று முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.