பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014


அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு  விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.அச்சுவேலி முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நபரை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் யாழ். ஊரெழு பகுதியைச் சேர்ந்த தனஞ்சயன் என்பவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ் வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம், யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவா குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைத்திருக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் விசாரணைகளின் போதே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதுடன், அவரிடமிருந்து வாள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன மீட்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.