பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014

யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் இருந்து பளை வரையும், பளையில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
பளையில் இருந்து காங்கேசன்துறை வரையான புகை
யிரத பாதையின் நிர்மாணப்பணிகளை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு ரயில் பாதைகள் புணரமைக்கும் பணிகள் யாழ்-சாவகச்சேரி பகுதி வரை பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் பளையிலிருந்து சாவகச்சேரி வரையான பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14ம் திகதி ஐனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டன.
இதைதொடர்ந்து அதிவேகத்திற்கான ரயில் பாதை புணரமைக்கப்பட்ட நிலையில் ,மிசாலை, மிருசுவில், சாவகச்சேரி, வரையிலான பகுதிகளின் வேலைத்திட்டங்கள் முடிவடைந்துள்ளன.
தற்போது நாவற்குழி, யாழ்ப்பாணம் பகுதி வரையான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் யூன் மாதத்தில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.