பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2014


பா.ஜனதா 278 தொகுதிகளில்  முன்னிலை வகிப்பதால், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர மாநில கட்சிகளின் தயவின்றியே அக்கட்சி மத்தியில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 543 இடங்களில் பா.ஜனதா கூட்டணி 331 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் பா.ஜனதா மட்டுமே 9 தொகுதிகளில் வெற்றி பெற்றும்,  269 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.
பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகள் 53 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
ஆட்சியமைக்க 273 இடங்களை போதுமானது என்பதால் பா.ஜனதா தனித்தே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.  இருப்பினும் மத்தியில் ஸ்திரமான ஆட்சி மற்றும் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைத்துவிட்டு, வெற்றிபெற்றதும் அவர்களை அமைச்சரவையில் சேர்க்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதாலும் கூட்டணி கட்சிகளுக்கு மோடி அமைச்சரவையில் இடம் கொடுப்பார் என்றே தெரிகிறது.
இதுகுறித்து தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் வானதி சீனிவாசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில். வெற்றிபெற்ற பின்னர் கூட்டணி கட்சிகளை கழற்றிவிடும் குணம் பா.ஜனதாவுக்கு கிடையாது என்று கூறினார்.