பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014


சோனியாகாந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று கோராக்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய தனியார் விமான நிலையம் மூலம் புறப்பட்டார்.


அப்போது புழுதிக்காற்று வீசியதால் விமானம் நிலை தடுமாறியதாகவும், இதையடுத்து ஆக்ராவில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவர் ஒரு மணி நேரம் கழித்து டெல்லி திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி சென்ற விமானமும் இதுபோன ஒரு மோசமான வானிலை காரணமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.