பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014


எம்.பி.க்களாக பாராளுமன்றத்தில் நுழையும் கணவன்–மனைவி

எதிரெதிர் கட்சி சார்பில் போட்டியிட்ட கணவரும், மனைவியும் வெற்றி பெற்று ஒரே சமயத்தில் மக்களவைக்கு செல்லவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் விஷயமாகியுள்ளது.



பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலம், மாதேப்புரா தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவை 56 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டவர், ராஷ்ட்ரீய ஜனதாதள வேட்பாளர் ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ். இவர் 5–வது முறையாக எம்.பி. ஆகி உள்ளார்.
இவரது மனைவி ரஞ்சீத் ரஞ்சன். இவர் சுபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி, ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் திலேஷ்வர் காமாயித்தை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
அந்த வகையில் 16–வது பாராளுமன்றத்திற்கு வெவ்வேறு கட்சியை சேர்ந்த பப்பு யாதவ்– ரஞ்சீத் கணவன், மனைவியாக செல்லப்போகிறார்கள்.