பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2014


வாஸ் குணவர்தனவிடம் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு
கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் இருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள், அரசாங்க ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பம்பலபிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சியாமின் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தன, அவரது மகன் மற்றும் இரண்டு காவற்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் விசாரணை செய்ய இரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர்.
இதன் அடிப்படையில் அவற்றை இரசாயன பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.