பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014


பிரபாகரனை நினைவு கூரவேண்டாம்; இந்திய பொலிஸார் அறிவுறுத்தல் 
news
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் இவ்வாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன், இதனால் அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முயற்சிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எனவே, இந்த விடயங்கள் குறித்து இலங்கை அகதிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.