பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014


டுவிட்டரில் வியாழன் அன்று  ஜனாதிபதி


சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதிலளிக்கவுள்ளார். கொழும்பில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்கள்
டுவிட்டர் மூலம் எழுப்பும் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கவுள்ளார்.
வியாழன்  முற்பகல் 11.30 மணிமுதல் சுமார் 45 நிமிட நேரம் கேள்வி பதில்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிரு ப்பதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக அலகு அறிவித்துள்ளது.
இந்தக் கேள்வி பதில்களை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொகுத்து வழங்கவிருப்பதுடன், பதில்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகபூர்வ ட்டுவிட்டர் கணக்கின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
கேள்வி பதில்களுக்கு குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டிருப்பதால் ஜனாதிபதி அவர்களிடம் கேள்விகேட்க விரும்புபவர்கள் முன்கூட்டியே கேள்விகளை பதிவுசெய்யுமாறு ஜனாதிபதியின் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக அலகு கேட்டுக்கொண்டுள்ளது.
ட்டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னுடன் கலந்துரையாட வருமாறு ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.