பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014


ஈழத் தமிழனப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அமைந்துள்ள பகுதிக்கு எதிரில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமிழர்களுக்காக இந்த நிகழ்வை மே பதினேழு இயக்கம் ஒழுங்கு
செய்திருந்தது.
நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட கழக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
தனித் தமிழ் ஈழமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழினப் படுகொலை நினைவேந்தல் சுடரை மதிமுக பொதுச் செயலாளர் ஏற்றி வைத்தார்.
நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் மெழுகுவர்த்திகளை ஏந்தி மண் மீட்பு போரில் பலியானவர்களுக்கு தீப அஞ்சலி செலுத்தினர்.