பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014


தமிழக அமைச்சரவையில் மாற்றம் : புதிய அமைச்சர்கள் நாளை
பதவியேற்பு!

 


தமிழக அமைச்சரவையில் இருந்து பச்சைமால், பி.வி.ரமணா, தாமோதரன் ஆகியோர் நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.  


அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அகிரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  எஸ்.பி.வேலுமணிக்கு நகரா ட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கோகுல இந்திராவுக்கு  கைத் தறி மற்றும் துணிநூல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
உள்ளாட்சித்துறையை கவனித்த கே.பி.முனுசாமிக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.  இளைஞர் நலத்துறையை கவனித்த ஆர்.பி.உதயகுமாருக்கு வருவாய்துறை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.  
புதிய அமைச்சர்கள் நாளை மாலை கவர்னர் மாளிகையில் பதவி ஏற்கிறார்கள்.