பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2014

ஈழத்து சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்த கையிலைநாதனுக்கு கௌரவிப்பு
                     
ஈழத்திலுள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபலமான முன்னாள் சைக்கிளோட்ட வீரர் வைத்திலிங்கம் கையிலைநாதனுக்கு நாளை கௌரவிப்பு நிகழ்வு மேற்க்கொள்ளப்படவுள்ளது.
 
இந்த கௌரவிப்பு நிகழ்வு மூளாய் வதிரன் புலோ சித்தி விநாயகர் தேவஸ்தான திருமறை மண்டபத்தில் நாளை பி.ப 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
இலங்கையில் அமைந்துள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசிப்பதற்காக வைத்திலிங்கம் கையிலைநாதன் மற்றும் சிங்கள இனத்தை சேர்ந்த சைக்கிளோட்ட வீரரும் அண்மையில் தமது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பயணத்தை முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது