பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014

 வறுமையின் கொடுமையிலும் கல்வியில் உச்சம்.சென்னை மாணவியின் சாதனை கேளீர் 
சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை.. ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்…


அப்பாவுக்கு கண் தெரியாது… தம்பி தங்கைகளுடன் சொற்பமாக வரும் வீட்டு வாடகையில் படித்து வெற்றி பெற்று இருக்கின்றார்…மதிப்பெண் ரிசல்ட் பார்த்து விட்டு பார்வையற்ற தகப்பனை அழைத்துக்கொண்டு நடந்து வந்த இந்த சவுஜன்யாவில் பீடு நடை இருக்கின்றதே… தந்தைக்கு கொடுக்கும் மரியாதை  என்ன  சொல்வது

அதுக்கு இணையே இல்லை.. காலையில் அந்த போட்டோ ஆயிரம் மிடுக்குளை உணர்த்தியது.