பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014

சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட பிரதேச செயலகத்தின் கூரைகள் 
 வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால்  அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன்  ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.

 
குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 7 மணியளவில் சுழல் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
 
இந்நிலையில் வெட்ட வெளியில் அமைந்துள்ள அலுவலகத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.இதனால் மழை நீர் உட்புகுந்ததால் 3 கணனி உட்பட சில ஆவணங்களும் நனைந்து சேதமடைந்துள்ளது.