பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2014


நடிகை நக்மா தோல்வி அடைந்தார்.ரோஜா  முன்னணியில் 
மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை நக்மா வெறும் 13,222 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிட்டார். இந்த நிலையில்  மீரட் தொகுதியில் நக்மாவை எதிர்த்து போட்டியிட்ட ரஜேந்திர அகர்வால் 1,67 298 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

இரண்டாவது இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முகம்மது ஷாகித் அக்லாக் 91,894 வாக்குகளும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷாகித் மன்சூர் 64,001 வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.  இதையடுத்து நக்மா வெறும்  13,322 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடம் வகிக்கிறார். இதன் மூலம் நக்மாவின் தோல்வி ஏறக்குறையை  உறுதியாகிவிட்டது.