பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014


எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பொறுப்பு: ஜெ., அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்
. (இவர் ஏற்கெனவே வகித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.)

அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில், எடப்பாடி கே.பழனிசாமி (சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.