பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2014


மகிந்தவின் வருகை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!- பழ. நெடுமாறன்
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் 26ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26ம் திகதி பதவி ஏற்க உள்ளார். இதில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜபக்ச வருகையை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் 26ம் திகதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நான் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன். தஞ்சையில் ரயில் நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் அயனாவரம் முருகேசன் தலைமை ஏற்கிறார் என அதில் கூறப்பட்டுள்ளது.