பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014

ஹாட்ரிக்\' தோல்வியை தவிர்க்க பாடுபடுமா சென்னை? ஐதராபாத்துடன் இன்று மோதல் 
ஐ.பி.எல் தொடரில் ராஞ்சியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டத்தில்  தோல்வியுற்றது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் களத்தடுப்பில் கவனம் தேவைப்படுவதாக அணித்தலைவர் டோனி கூறியிருந்தார். களத்தடுப்பில் மட்டுமல்லாது துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்கினால் சென்னை அணி வெற்றி பெறலாம்.

மேலும் வலுவான அணியாக மாறிவரும் ஐதராபாத் அணியை எதிர்த்து தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது