பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014

போதைப்பொருள் வர்த்தகர் சபாஸ் இலங்கையில் கைது 
news
மாலைதீவைச்சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகரான இப்ராஹிம் சபாஸ் அபுதுல் ரஷாக் என்றழைக்கப்படும் 'சபா' இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
மாலைதீவு நீதிமன்ற அனுமதியுடன் கடந்த பெப்ரவரி மாதம் சிகிச்சைக்காக இலங்கைக்கு வருகைதந்த அவர் நாடு திரும்பாததையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை பொலிஸாரும் மாலைதீவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மேலும் அவர் சிறிது காலம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.