பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2014


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.உமாநாத் அவர்கள் 21.05.2014 புதன்கிழமை காலை 7.15 மணி அளவில் காலமானார்.
அவரது இறுதி நிகழ்ச்சி 22.05.2014 வியாழன் காலை 10 மணி அளவில் திருச்சியில் நடைபெறுகிறது.

முன்னதாக அவர் உடல் நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வரதராஜன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.