பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014


வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பணிகளில் சேரும் போது பல்வேறு துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி பிரான்ஸிஸ் க்ரீபீன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக க்ரிபீன் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்று வெளிநாடுகளில் பணியாற்றும் 24 வீதத்தினர் தேசிய பொருளாதாரத்தில் 33 வீத வருமானத்தை ஈட்டி தருகின்றனர்.
இந்தநிலையில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் உரிமைகளை கண்காணிப்பதற்காக விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதல் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.