பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014


இராணுவத்தின் தமிழரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்களின் நிலங்களை இன்னமும் ஆக்கிரமித்திருக்கும் இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோரியும் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட த.தே.மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜெகதீஸவரனை விடுதலை செய்யக் கோரியும் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கிளிநொச்சி அரச செயலகம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்தக்கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளன.
வலிகாமம் வடக்கு, கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், இரணைத்தீவு, கிளிநொச்சி கரும்புத்தோட்டம், முல்லைத்தீவு, கோப்பாபுலவு உட்பட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இருந்து வெளியேறக்கோரியும், தமது சொந்த இடங்களில் மக்கள் வாழ வழிவகை செய்யக் கோரியும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கோசங்களை மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களும் எழுப்பினர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பிரதிநிதிகள், த.தே.கூட்டமைப்பின் பா.உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், சி.சிறீதரன் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பெருமளவோனார் கலந்து கொண்டு குரல் எழுப்பியிருந்தனர்.