பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014



பாஜக கூட்டம் : பிரதமராக மோடி தேர்வு!
 


நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.  


இக்கூட்டத்தில், நாடாளுமன்ற பாஜக குழு தலைவராக நரேந்திரமோடியின் பெயரை அத்வானி முன் மொழிந்தார். முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி,  சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி வழிமொழிந்தனர்.

பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில், நரேந்திரமோடி ஒருமனதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிய ஜனதாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் இது.  பாஜக வெற்றிக்கு வித்திட்ட  அனைவருக்கு நன்றி என்று கூறினார் ராஜ்நாத்சிங்.