பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014


ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்ச கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் அரசு
 ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்ச கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் அரசு தமிழீழம் அமைவதும், அமையாததும் ராஜபக்சவின் கையில் உள்ளது: பா. ஜனதா-விகடன் நியூஸ் 

வங்கதேசம் உருவானது போன்ற சூழல் இலங்கையில் (தனி ஈழம்) உருவாகாது என்று உறுதியாக சொல்ல முடியாது என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை தமிழர் நலனை விட்டுக்கொடுக்கும் வகையில் பாஜக நடந்து கொள்ளாது என்றும், தமிழர் நலன் கருதியே ராஜபக்சவுக்கு பா.ஜ.க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சார்க் அமைப்பை சேர்ந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கை தமிழர் நலனை விட்டுக் கொடுக்கும் வகையில் பா.ஜ.க நடந்து கொள்ளாது என்றும், இலங்கை தமிழர்கள் சமஉரிமையுடன் வாழ தொடக்கமே இந்த முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்சவை காங்கிரஸ் அழைத்ததிலும், பா.ஜ.க அழைப்பதிலும் வித்தியாசம் உண்டு என்று கூறிய அவர், ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்ச கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் அரசு என்றும் கூறினார்.
தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழர் வளர்ச்சிக்கு மோடியின் அரசு செயல்பட துணையாக இருப்போம் என்றார்.
மேலும், அடுத்த 6 மாத காலத்திற்கு அனைவரும் அரசை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், எந்த கட்சியாக இருந்தாலும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
'கொலைகாரன் கத்தி...மருத்துவர் கத்தி'
முன்னதாக நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என இன்று காலை கூறியிருந்த பொன்.ராதாகிருஷ்ணன்,  அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்றும்  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.