பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2014

மஹிந்த இந்தியா வரக்கூடாது; இளைஞர் தீக்குளிக்க முயற்சி 
நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ வரக்கூடாது என்று தெரிவித்து சேலத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


சேலம் மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் நீதிதேவதை சிலைக்கு அருகில் நேற்றுக் காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
சேலம், கருப்பூரை சேர்ந்த வெற்றிவேல் (வயதுd 31) என் பவரே இவ்வாறு தீக்குளிக்க முற்பட்டார் என்று தெரிவிக்கப் படுகிறது.
 
'ராஜபக்­ இந்தியாவுக்கு வரக் கூடாது உள்ளிட்ட கோ­ங் களை முழங்கியபடி தன் மீது மண்ணெண்ணையை ஊற் றித் தீவைத்து கொள்ள முயற் சித்துள்ளார் இளைஞர். பொது மக்கள் அங்கு திரண்டு அவ ரைத் தீ வைக்கவிடாது காப்பற் றியுள்ளனர். உடனே பொது மக்கள் அவரை சேலம் அஸ் தம்பட்டி பொலிஸாரிடம் ஒப் படைத்தனர். 
 
நான் கட்டட வேலைக்குச் சென்று வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்­ வரக்கூடாது. 
 
அவர் இந்தியா வருவது என்னைப் போல் பலருக்குப் பிடிக்கவில்லை. என் எதிர்ப்பை தெரிவிக்கத் தீக்குளிக்க முயற்சித்தேன் என்று வெற்றிவேல் பொலிஸாரிடம் தெரி வித்தார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.