பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்றவர் கைது 
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி  இலங்கைக்கு வர முயன்ற நபர் மதுரை விமானநிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். 

 
இலங்கையைச் சேர்ந்த பிரதீபன் (28) என்பவர் கடந்த 2007ல் இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற இவர் தமிழகத்தில் திருமணம் செய்து மனைவியுடன் வசித்து வந்தார். 
 
இந்நிலையில், மனைவியுடன் இலங்கைக்கு வர  மதுரை விமான நிலையம் சென்றிருந்த போது அவர் வைத்திருந்த கடவுச்சீட்டு போலியானது என்பது குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. 
 
இதை அடுத்து, அவரை பெருங்குடி பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.