பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2014


ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இலங்கை மனித உரிமை ஆர்வலரின் மனைவி தெரிவு
பிரபல அரசியல் விமர்சகரும் எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான இலங்கையை சேர்ந்த ரஞ்சித் ஹென்னாயக்க ஆராச்சியின் மனைவியான பாபரா லொக்பிலர் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் ஜெர்மனியின் பசுமை கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக சர்வதேச மன்னிப்புச் சபையில் உயர் பதவி வகித்து வந்த பாபரா லொக்பிலர், மனித உரிமை தொடர்பில் சிறந்த அனுபவங்களை கொண்ட செயற்பாட்டாளர்.
இரண்டாவது முறையாக அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த முறை அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை பிரிவின் தலைவராக பாபரா செயற்பட்டு வந்தார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருக்கும் ரஞ்சித் ஹென்னாயக்க ஆராச்சி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1988 ஆம் 89 ஆம் ஆண்டு இலங்கை அரச படையினர் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போராட்டத்தில், மகிந்தவுக்கு உதவி முக்கியமான நபர்.
ஹென்னாயக்க ஆராச்சி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தற்போதைய செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை சர்வதேச ரீதியில் மிகவும் கீழ் மட்டத்தில் மதிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே தற்போது இருந்து வருகிறது எனவும் அவர் கூறியிருந்தார்.