பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2014

நாளை நடைபெறும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் ஈழத்து தமிழன் போட்டி 
வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொரு  ஐரோப்பிய தமிழனும் யோகி அவர்களை ஆதரிப்போம் 

நாளைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு  பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேரிவு செய்யும் தேர்தல் நடக்கவுள்ளது .இந்த தேர்தலில் யோகி எனப்படும் பிரித்தானிய வாழ் சொக்கலிங்கம் யோகலிங்கம்  NLP கட்சியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் . ஈழத்து தமிழன் இன்று  உலகில் 80 நாடுகளில் வாழ்ந்து வருகிறான்.அதில் சுமார் 25 நாடுகளில் ஓரளவு பெரும் தொகையாக வாழ்ந்து வருகின்றனர் . இதில் 90 வீதமானோர் ஈழத்து போராட்டத்தினை காரணம் காட்டி அரசியல் தஞ்சம் கோரிசென்று வாழ்பவர்கள் .ஆதலால் எமக்கான ஒரு கடமை எம் தாயகத்துக்கு உழைக்கும் பொறுப்பு . தமிழர்களே. எத்தனை லட்சக் கணக்கில் எத்தனை நாட்டில்  நாங்கள் வாழ்ந்து வந்தாலும் முறைப்படி அரச துறைகளில் ,அரசியல் கட்சிகளில்  ,பாராளுமன்ற அதிகாரங்களில் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது அல்லது  சொற்பமானதே . இந்த தவறை நாம்  முன்னரே திட்டமிட்டு செயல்படாமல் போனது தவறு என்பது அண்மைக் காலங்களில் நாங்கள் உணர்ந்து கொண்டோம் எத்தனை போராட்டங்கள் பணிகள் செய்தாலும் உத்தியோக பூர்வமாக  சில முக்கிய நுழைய வேண்டிய இடங்களில் நுழைய முடியாமல் தவித்திருக்கிறோம் .இந்த குறைகளை  எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். அந்த வகையில் நாளை நடைபெறும் தேர்தலில் யோகி அவர்கள் போட்டியிடுவது சிறப்பானதாக அமைந்துள்ளது.ஒவ்வொரு வாக்குள்ள தமிழனும் தயவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடும்பத்தோடு  சென்று  வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் வாக்கினால் வெல்லப் போகும் யோகி உங்கள் தாயகத்துக்காக  உழைப்பான் .உதவுவான் .உரமூட்டுவான் என்ற நம்பிக்கையை மனதில்  வைத்து கொண்டு புறப்படுங்கள் உறவுகளே.