பக்கங்கள்

பக்கங்கள்

29 மே, 2014


திண்டுக்கல் லியோனி .திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மக்களவை தேர்தலில் நாகை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.எஸ். விஜயனை ஆதரித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 13–ந் தேதி பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல்
லியோனி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்ததாக லியோனி மீதும், அனுமதி இல்லாமல் கூட்டத்தை கூட்டியதாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசு மீதும் திருத்துறைப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் ஆலிவலம் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேலு, சப்–இன்ஸ்பெக்டர் கல்யாணம் மற்றும் போலீசார் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவா வருகிற 4–ந் தேதி லியோனி, அன்பரசு ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தர விட்டார்.