பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2014


ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதில் சிக்கல்

மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை கர்நாடத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ப.சிதம்பரம் எம்.பி. ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 
அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 121 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், இரண்டு எம்பிக்களை உறுதியாகவும், ஒரு எம்பியை சுயேட்சைகள், உதிரி கட்சிகள் ஆதரவு மூலம் தேர்வு செய்ய முடியும்.
எனவே ப.சிதம்பரத்தை கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெற்றது.

இதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில் ப.சிதம்பரத்தை கர்நாடகத்தில் இருந்து தேர்வு செய்வது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.