பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014



சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் 
 அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டு இன்று பணியிலிருந்து விலகியிருப்பதற்கு  தீர்மானித்துள்ளது.
 

தாதியர்களால் விடுக்கப்படுகின்ற அழுத்தங்களை கண்டித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறாயினும் இன்று முன்கெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என அகில இலங்கை குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
 
தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று வழமைபோன்று கடமைக்கு சமூகமளிப்பார்கள் என சங்கத்தின் தலைவர் தீப்தி வீரதுங்க தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாதியர்கள் அழுத்தங்களை பிரயோகித்தால் நிறுவனத் தலைவர்களிடம் அது தொடர்பில் முறையிடலாம் என பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க கூறியுள்ளார்.