பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014

திருமணம் செய்ய வலியுறுத்தி காலதன் வீட்டுக்கு சென்ற பெண், காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
ஈரோடு அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண் காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
செய்யப்பட்டார்.

கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த சத்தியப்பிரியாவும், சொட்டையான்பாளையத்தைச் சேர்ந்த ரகுநாத் என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் ரகுநாத் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ரகுநாத் வீட்டிற்கு சென்ற சத்தியப்பிரியா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அப்போது ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரன், சத்தியப்பிரியாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சத்தியப்பிரியாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய ரகுநாத், ஈஸ்வரன், ஈஸ்வரனின் மனைவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.