பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2014


ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதாக விமல் வீரவன்ச அறிவிப்பு
தமது கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறினால், ஆளும் கட்சியிலிருந்து விலகத் தயார் என வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கார்தினல் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்தன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அமைச்சர் விமல் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜே.என்.பி. பொதுச் சபைக் கூட்டத்தில் 12 அம்ச திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அந்த யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனைத் திட்டங்களை கண்டி மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகளிடமும் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்து இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகவும், அந்த சந்திப்பின் பின்னர், கட்சியின் தீர்மானம் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.