பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2014

பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திருத்திய தியாகராஜன் மீது விசாரணை  வேகொறி மனு 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்திய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பேரறிவாளன் வாக்குமூலத்தில் திருத்தம் செய்ததாக சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில், தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் துரைசெல்வன் என்பவர் சென்னை தடை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.