பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014


ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் வாக்குவாதம்!- கிழக்கு மாகாண சபையில் அமளி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இன்று கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
சபை அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்ததுடன் போரின் இறுதியில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உட்பட பொதுமக்கள் தொடர்பில் தற்போதைய நிலையை விட மேலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் கூறியிருந்தனர்.
கூட்டமைப்பினரின் இந்த கருத்தை அடுத்து மாகாண சபை தலைவர் கருத்து வெளியிட்டதை அடுத்து இந்த அமளியான நிலைமை ஏற்பட்டது. கூட்டமைப்பினரும் ஆளும் கட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.