பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014


ஆ.ராசா, கனிமொழி கோரிக்கையை ஏற்றது சிபிஐ கோர்ட்


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி
இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.



இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, ஆவணங்களை சரிபார்க்க தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று ராஜா மற்றும் கனிமொழி கோரியதால் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.